வியாழன், 24 மே, 2012

மாட்டிறைச்சி சாப்பிடுவதால் இளவயது மரணம் ஏற்படும் ஆபத்து...!

"Red meat" எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது.

மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. "Myoglobin" என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட "Myoglobin" அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ”ஹாட் டாக்”(சாஸேஜ்) எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம். அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!
வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.
தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்..!

நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.

கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது
இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள்.

"அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து சாப்பிடுங்க" என்று இன்னொரு பக்கம் ஆலோசனை வேறு சொல்வார்கள். இதனால், எதை சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? என்ற குழப்பம் நிறைய பேருக்கு வரத்தானே செய்யும்?. இதற்கான ஆலோசனைகளை கூறுகின்றனர் உணவியல் நிபுணர்கள் படியுங்களேன்.

முதலில் நமக்கு கேஸ் ப்ராப்ளம் வருவதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாத சாப்பாட்டு விஷயங்களால் தான். மேலும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களால் கூட உடலில் கேஸை அதிகமாக சேர்க்கக் கூடிய நிலை வந்து விடுகிறது.

அரைத்து சாப்பிடுங்கள்

வேக வேகமாக உணவை உண்பதால், வாய்வழியாக காற்றானது வயிற்றுக்கு செல்கிறது. உணவை அதிகமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக சுவைத்து சாப்பிட்டால் கேஸ் ப்ராப்ளம் ஏற்படாது.

மேலும் சிக்லெட், சூயிங்கம் போட்டு நீண்ட நேரம் மெல்லுவதாலும், வயதானவர்கள் வெறும் வாயை மெல்லுவதாலும் கேஸானது வயிற்றுக்குள் போக அதிக வாய்ப்பு உள்ளது.

இனிப்பு உணவுகள்

இனிப்புப் பொருட்களில் 'சார்பிடால்' என்ற பொருள் இனிப்புக்காக சேர்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பாக்கெட்டில் அடைக்கப்படும் இனிப்புகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் அதிக கேஸ் உண்டாகும்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்து நிரம்பிய பொருட்கள் பெரும்பாலும் அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களாகும். அதிலும் ப்ரக்டோஸ், லேக்டோஸ், ரேபினோஸ், சார்பிடால் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இவை அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடியவை. எனவே இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.

சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அதிகமாக கேஸ் உருவாவதைத் தடுக்கலாம். அதற்காக பட்டினி கிடக்க முடியுமா! ஆகவே கேஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களான வெண்ணெய், தயிர், சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ், வெள்ளை சாதம், முட்டை, மீன், கேரட், வெஜிடேபிள் சூப் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

ஆகவே அளவோடு சாப்பிடுங்கள், உங்களை கேஸ் தொந்தரவு செய்யாது என்கின்றனர் நிபுணர்கள்.
நிறைப் பராமரிப்பு தாய்க்கும் சேய்க்கும் நலம்

வழமையாகக் கர்ப்பிணிப் பெண்களால் அவர்களை இரண்டு பேருக்குச் சேர்த்துச் சாப்பிடுங்கள் என்றுதான் கூறிவந்தார்கள் பெரியவர்கள். எனினும் அவர்கள் கூறியது எமது நாட்டிற்கே பொருந்தும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பெண்களுக்குத்தான் இந்த நிறைப்பராமரிப்பு உகந்தது என்று ஆய்வாளர்கள் விளக்குவதை மனதிற்கொள்ளுங்கள்.

எனினும் எந்த நாட்டிலும் உள்ள அளவிற்கதிகமாக நிறையைக் கொண்ட பெண்கள் தமது கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது குழந்தைக்கு எந்தவிதத் தீங்கையும் செய்யாது என்கின்றது புதிய ஆய்வொன்று.

இந்த ஆய்வு British Medical Journal ஊடகத்தினால் 7000 பெண்களில் 44 ஆய்வுகளின்மூலம் செய்யப்பட்டிருந்தது. லண்டனைத் தளமாகக் கொண்ட இந்த அணியினரின் ஆய்வின்படி ஒரு சுகாதாரமான உணவுக் கட்டுப்பாட்டைச் செய்வது நிறை அதிகரிப்பதையும் பல சிக்கலான அபாயங்களையும் தடுக்கின்றது என்றது.

ஆனால் தற்போதைய வழிகாட்டிகள் உணவுக்கட்டுப்பாட்டையோ அல்லது நிறைக் கண்காணிப்பையோ செய்யுமாறு கூறவில்லை.

Health and Clinical Excellence இற்கான தேசிய நிறுவனத்தினால் 2010இல் வெளியிடப்பட்ட அறிவுரையில் கர்ப்பகாலத்தில் உணவுக்கட்டுப்பாடு செய்வது குழந்தைக்கு சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்துமென்றே கூறப்பட்டது.

எனினும் பெண்கள் தாங்கள் கருத்தரிக்க முன்பே ஒரு சிறப்பான நிறையினை அடைந்திருக்கவேண்டுமென்றும் கூறப்படுகின்றனர்.

பிரித்தானியாவின் அரைவாசி சனத்தொகையினரும் ஒன்றில் அளவுக்கதிகமான நிறையுடன் அல்லது பருமனாகக் காணப்படுகின்றனர். அத்துடன் இவ்வாறான வீதங்களும் தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றன.

அத்துடன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள 20 வீதத்திற்கும் 40 வீதத்திற்குமிடைப்பட்ட பெண்கள் குறிப்பிட்ட நிறையைவிடவும் கர்ப்பகாலத்தில் அதிக நிறையைப் பெற்றுவிடுகின்றனர்.

இதனால் அதிக நிறைகளும் உயர் குருதியழுத்தம் மற்றும் திகதி குறிப்பிடப்பட்டதைவிடவும் முன்பே குழந்தை பிறக்கக்கூடிய நிலையையும் உயிராபத்துக்களையும்கூட ஏற்படுத்தலாம்.

உண்மையில் இந்த ஆய்வில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அல்லது இரண்டும் சேர்ந்த நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

இந்த அறிவுரைகளில் மட்டுப்படுத்தப்பட்ட கலோரிகளை உள்ளெடுப்பது, சமநிலையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் முழுத்தானியங்கள், பழங்கள், மரக்கறிகள் போன்றவை உள்ளடங்கின.

இதன்பின்னர் ஆய்வாளர்கள் கருத்தரித்த பெண்கள் எவ்வளவிற்கு நிறை அதிகரித்துள்ளார்கள் என்று பரிசோதித்ததுடன் ஏதாவது சிக்கல்கள் உள்ளனவா என்றும் பார்த்தனர்.

ஒவ்வொரு நகர்வும் ஒரு பெண்ணின் நிறையைக் குறைத்தபோது உணவுக்கட்டுப்பாடு சிறந்ததொரு விளைவினைத் தந்தது. இதன்போது 4கி.கி. நிறை குறைவு காணப்பட்டது.

உடற்பயிற்சி மூலமெனில், நிறை குறைவு சராசரியாக 0.7கி.கி. இருந்தது. உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இணைந்தபோது 1கி.கி. சராசரியான நிறைகுறைவு காணப்பட்டது.

இதன்மூலம் குழந்தைகளின் பிறப்பின்போதான நிறைவு பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த ஆய்விற்குத் தலைமைதாங்கிய தமிழ்ப்பெண் வைத்தியரான ஷகிலா தங்கரத்தினம் லண்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்திய ஆலோசகராக உள்ளார்.

இவர் குறிப்பிடுகையில் அதிக நிறையுள்ள பெண்கள் அதிகரித்த சிக்கல்களைக் கொண்டிருந்ததைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்தார். நிறைக் கட்டுப்பாடென்பது சிரமமெனினும் அறிவுரைகளின்படி செய்தால் அவர்களால் நிறையைக் குறைக்கமுடியுமென்றார்.

தங்களது குழந்தைகளிற்கு இதனால் பாதிப்பேற்படலாமெனப் பல பெண்கள் நினைக்கலாம். ஆனால் இந்த ஆய்வின்படி உணவுக்கட்டுப்பாடு பாதுகாப்பானெதென்றும் குழந்தையின் நிறை பாதிக்கப்படாதென்றும் தெரியவந்துள்ளது.

எனினும் இதில் கவனிக்கவேண்டியதென்னவெனில் கர்ப்பிணிகள் சாதாரணமாகவுள்ள நிறையைக் குறைக்கக்கூடாதென்பதிலும் அளவுக்கதிகமாக உள்ள நிறையைத்தான் குறைக்கவேண்டுமென்பதையும் விளங்கிக்கொள்ளவேண்டுமென்கின்றனர் ஆய்வுசெய்த வைத்தியர் குழாமினர்.
அழகான சருமம் வேண்டுமா? கையில மருந்திருக்கு

கோடை காலத்தில் சருமத்தில் உள்ள நுண் துளைகளில் அதிக அளவு கழிவுகள் அடைத்துக்கொள்கின்றன. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் சருமம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சருமத்தை பாதுகாக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

பேஸ் பேக்

முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது.

ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு, தயிர்

ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

மீசோதெரபி

தோல் நோய் சிகிச்சை மருத்துவர்களிடம் சென்று மீசோதெரபி செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. அதுவும் தவிர இது கொஞ்சம் காஸ்ட்லியானது. எனவே காசு செலவில்லாத நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டில் உள்ள கடலை மாவு, மஞ்சள் பொடியே சருமத்தைப் பாதுகாக்க போதும் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
'நேரான முடி' பெற ஆசையா?

சுருட்டை முடியை விரும்பாதவர்கள், முடியை நேராக்க அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நேராக மாற்றுகிறார்கள். அப்படி அங்கு செல்லும் பலருக்கு முடி அதிகமாக உதிர ஆரம்பிப்பதுடன் மென்மைத் தன்மையையும் இழக்கிறது. அப்படி முடி உதிர்ந்து, மென்மை இழந்து நேராக்கும் முடியை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாக, மென்மையாக மாற்றலாம். அது எப்படி என்று பார்ப்போமா?

தலைக்கு குளிப்பதற்கு முன் தயிரை முடி மற்றும் மயிர் கால்களில் நன்கு படும் படி தடவ வேண்டும். பிறகு 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இதனால் முடியானது நேராகவும், மென்மையாகவும் இருக்கும். மேலும் பொடுகு இருப்பவர்கள், அந்த தயிருடன் சிறிது எலுமிச்சைப் பழ சாற்றை விட்டு தடவினால் பொடுகு போய்விடும்.

வாரத்திற்கு ஒரு முறை ஆயில் மசாஜ் செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆயில் மசாஜை தேங்காய் அல்லது நல்லெண்ணெய்யில் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் எண்ணெய்யை சூடு படுத்தி செய்தால் அதைவிட நல்லது. நன்கு எண்ணெய் ஊறியதும் சாதாரண நீரில் அலசினால் முடி பட்டுப் போல் மிளிரும்.

முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொண்டு அத்துடன் நல்லெண்ணெய்யை ஊற்றி, அதை முடிகளுக்கு தடவி 20 30 நிமிடம் ஊறவிடவும். பின் ஷாம்பு கொண்டு அலசினால் முடியானது மென்மையாக பட்டுப் போல் காணப்படும்..

அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நேராக மாற்றியப் பின் முடி பார்க்க வறண்டு காணப்படும். தலைமுடியை அலசியப் பிறகு, ஒரு மக் தண்ணீரில் சிறிது விளிகர் விட்டு, அந்த தண்ணீரால் முடியை அலசி, பின் சுத்தமான தண்ணீரால் அலசினால் முடி நன்கு மிளிரும்.

தேயிலையும் முடிக்குச் சிறந்த ஒரு நல்ல கண்டிஸ்னர் மற்றும் நிறம் தரக்கூடியவை. சிறிது தேயிலையை தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, ஆறிய பின் முடியில் தடவவும். பிறகு 15-20 நிமிடம் கழித்து அலசவும். இதனால் முடியானது நேராகவும் கொஞ்சம் கலராகவும் இருக்கும்.

என்ன உங்க முடியை ஆரோக்கியமா பராமரிக்க தயாரா இருக்கீங்களா!
கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!

கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

இயற்கை மருத்துவம்

ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி கருப்பாக வளர

உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்.
கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன.

இதயத்திற்கு ஏற்றது

இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதன்மூலம் உயர்ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ஆஸ்துமா நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறது.

ஆரோக்கியமான குழந்தை

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

உற்சாகத்தை அதிகரிக்கும்

இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம். இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்

சருமம் ஜொலிக்கணுமா? கேரட் சாப்பிடுங்க!

காய்கறிகளும் பழங்களும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல நம் அழகையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காரட் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிறம் பொன்போன்று ஜொலிக்கும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதேபோல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அந்த அளவிற்கு சருமத்தினை பளபளப்பாக வைக்க உதவுகிறது காரட்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்.

பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும். குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

மலச்சிக்கல்

சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உடலின் ஜீரண சக்தி சரியாக இருக்க வேண்டும். எனவே தினசரி நாம் உணவு உண்டபின் ஒரு கேரட்டை மென்றுத்தின்றால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும். உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும் ஜீரணத்தை துரிதப்படுத்தும். கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.

கேரட் பேசியல்

இரண்டு கேரட்டினை எடுத்து நன்றாக கழுவி வேகவைக்கவும். அதனை மசித்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும். வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும்.

கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்கள் இருந்தால் உதிர்ந்து விடும். புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்.

நச்சுக்கழிவுகள்

கேரட்டில் உள்ள பொட்டாடிசியம், வைட்டமின் எ போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை.

தினசரி கேரட் ஜூஸ் குடித்து வர கோடைகாலத்தில் ஏற்படும் சருமநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். கோடையில் முகம் கருமையாவதை தடுக்கும். முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும்.

காரட்டினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் சருமப் பாதுகாப்பிற்காக விலை உயர்ந்த ரசாயனப் பொருட்கள் வாங்காமல் தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.


டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?

எப்போதாவது ஒரு நாள் மனச ரிலாக்ஸ் பண்ண வெளியே போவோம், அப்ப சுவையான உணவைப் பார்த்ததும் நம்மை அறியாமலே டயட்டை மறந்து அதிகமா சாப்பிட்டு விடுவோம். அப்படி அளவுக்கு அதிகமா சாப்பிட்டு விட்டால் நம்ம வயிறு பண்ணுற தொந்தரவ தாங்க முடியாது. அந்த நேரத்துல என்ன பண்ணுணா தொந்தரவு போகும்-னு பார்ப்போமா!!!

1. சாப்பிட்டப் பிறகு 15-20 நிமிடங்கள் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ ஓய்வு எடுக்கலாம். அவ்வாறு செய்தால் மூளையில் இருந்து செல்லும் இரத்த சிவப்பணுக்கள் உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும். எஞ்சிய பொருட்கள் செரிமான மண்டலம் சென்று செரிமானம் ஆகி, வயிற்றுத் தொந்தரவை நீக்கும்.

2. உணவு உண்ட பின் நிற்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஓடுவது போன்ற கடினமான பயிற்சியை செய்யக் கூடாது, அதற்கு பதிலாக சிறிது நேரம் நடக்கலாம். நடந்தால் உடலில் செரிமானம் நன்கு நடைபெறும்.

3. அளவுக்கு அதிகமாக உண்ட பிறகு ஒரு கப் கிரீன் டீ குடித்தால் வயிற்று தொந்தரவு சரியாகும். ஏனென்றால் கிரீன் டீ செரிமானத்திற்கு மிகச் சிறந்த ஒரு மருந்தாகும்.

4. உடல் எடை குறைவதற்கு சுடு தண்ணீரும் ஒரு முக்கியமான ஒன்று. அப்படி இருக்கும் போது அதிகமாக சாப்பிட்டால், உடனே தண்ணீர் குடிக்காம, 25-30 நிமிடம் கழித்து குடிக்கலாம். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து குடிக்கலாம். இதனால் வாயுத்தொல்லை தடைபட்டு, செரிமானத்தன்மையும் அதிகமாகும்.

ஆகவே டையட்-ல இருந்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டவங்க, இந்த மாதிரியெல்லாம் செய்தால் டையட்டை சரிசெய்யலாம்.
பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு

முகத்திற்கு அழகு சேர்ப்பது பல்லுதாங்க... இறந்த பின்னரும் மண்ணில் மக்கிப் போகமல் இருப்பது பல்லுதாங்க... பல்லில் ஏதாவது பிரச்னை என்றால் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்குதாங்க... பயமா இருக்கா... அப்ப நம்ம அடையார் பல் டாக்டர் யஷ்வந்த் சொல்வதை கேளுங்க...
உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும்.

சில சமயம் புற்றுநோயாக மாறும் அபாயம் உண்டு. பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.

இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.


பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்...


செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும்.

செய்ய கூடாதவை...

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆமணக்கின் மருத்துவ குணங்கள்

குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள்.

சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள் இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை

அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன்
வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும்.

இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம். சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது
சில மாதங்களில் தவழணும்... தத்தி தத்தி நடக்கணும்... இல்லே டாக்டரை பாருங்க

‘‘எந்தவொரு குழந்தையும் பிறந்த சில மாதங்களில் தவழணும்... தத்தி தத்தி நடக்கணும்... ஓடணும்...பேசணும்... இதுல ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தால் உடனடியா குழந்தைய பரிசோதிக்கிறது நல்லது. அதே போல் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது... போன்ற விஷயங்கள் தவிர, சில உணர்ச்சிகள் நமக்குள்ளே மறைந்து இருக்கும்.

மத்தவங்களை அழுத்தமா பிடிக்கிறது, மாடிப்படியில ஏறும் போது படியோட அகலத்தை கணக்கிடுவது என சிலவற்றை சொல்லாம். இவை எல்லாரிடமும் ஒளிந்து இருக்கும். ஆனா, நிஜம் வேறு. ஆம்... சில குழந்தைகளுக்கு இந்த உணர்ச்சிகள் மாறுபட்டிருக்கும்‘‘ என்கிறார் உணர்ச்சி நிபுணர்
சவுமியா. இவர் உணர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ‘பைவ்‘ என்ற சிறப்பு பயிற்சி மையத்தை ஆழ்வார்பேட்டையில் நிர்வகித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:
‘‘ஒரு விஷயத்தை பார்த்து அதையே திரும்ப செய்வது தான் குழந்தை தனம். இது இயற்கை. சில குழந்தைங்களால அப்படி செய்ய முடியாது. அதுக்காக அவங்க மனரீதியா பாதிக்கப்பட்டவங்கன்னு அர்த்தமில்லை. உணர்ச்சிகளை அறிந்துக் கொள்ளும் நரம்புகள் அவங்களுக்கு ஒத்துழைக்காது அவ்வளவுதான்.

இந்த உணர்ச்சி கோளாறை மூணு வகையா பிரிக்கலாம். மாடுலேஷன், டிஸ்கிரிமினேஷன், மோட்டார். ஒவ்வொரு குறைப்பாட்டுலேயும் பார்க்கிறது, கேட்கிறது, உணர்வது அவங்களுக்கு பிரச்சனை இருக்கும். மாடுலேஷன் கோளாற்றில், கேட்கும் திறன் பிரச்சனை இருக்கும். இந்த குழந்தைகளுக்கு சில குரல்கள் பிடிக்காது. பார்க்கும் திறன்ல அதிக பிரகாசமான விளக்கை பார்த்துக்கிட்டே இருப்பாங்க.

அல்லது வெளிச்சத்தையோ, நிறைய படங்கள் கொண்ட புத்தகத்தையோ கண்டா வெறுப்போட முகத்தை திருப்பிப்பாங்க. தொடறதுல, யாராவது அணைச்சுக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா சட்டையில இருக்கிற சின்ன வேலைப்பாடுகூட அவங்கள பாடாய்படுத்தும். இரண்டாவது, டிஸ்கிரிமினிஷேன், அதாவது இரண்டு வெவ்வேறு ஒலிகளை வித்தியாசப்படுத்த தெரியாது. கரும்பலகைல இருக்கிற வார்க்கியத்தை பார்த்து எழுத சிரமப்படுவாங்க.

சில குழந்தைகங்க நெருக்கி எழுதுவாங்க, இல்லை என்றால் ஒரு பக்கத்தில் இரண்டு வரி மேல் எழுத மாட்டாங்க. மத்தவங்க தங்களை தொட்டாலும் இவங்க உணர மாட்டாங்க. கடைசி குறைப்படு மோட்டார். அவங்க மட்டுமே பேசுவாங்க. நாம சொல்றதை கேட்டு திருப்ப சொல்ல தெரியாது. மாடிப்படி ஏறும் போது விழுந்துடுவமோன்னு பயப்படுவாங்க. உடலை சமமாக்கி, கணக்கு போட்டு படி ஏற தெரியாது.

உணர்ச்சி குறைப்பாடுள்ள குழந்தைக்கு ஆடிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி மாதிரியான பிரச்சனையும் இருக்கும். அதற்கு ஏற்ப பயிற்சி கொடுக்கணும். எந்தவொரு குழந்தையும் பிறந்த கொஞ்ச நாளைக்கு தவழணும், தத்தி தத்தி நடக்கணும், ஓடணும், பேசணும். இதில் எந்தவொரு செயலில் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய பயிற்சியை அளித்தால் குழந்தையின் வளர்ச்சி சீராக அமையும்” என்றார் சவுமியா.
பாப்கார்ன் சாப்பிடுங்க கேன்சர் நோய்க்கு நல்லது

வாஷிங்டன்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சோள வகை உணவான பாப்கார்னில் உள்ள சத்துக்களும் பயன்களும் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தியேட்டர்களில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதிகம். விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வில் தெரிவித்துள்ள தகவல் வருமாறு :

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவை அன்றாடம் எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழ முடியும். அந்த வரிசையில் பாப்கார்ன் மிகச் சிறந்தது. இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து அதிகம். காய்கறிகள், பழங்களில் உள்ளதை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் ஊட்டச் சத்துகள் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் ஏராளமாக உள்ளன. அமினோ அமிலங்கள் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மறதி நோய்க்கு மருந்தாகவும், இதயத்துக்கு இதமளித்து மாரடைப்பு உள்ளிட்ட இதய சம்பந்தமான நோய்களில் இருந்தும் காக்கிறது. உடலுக்கு தீமை பயக்கும் மூலக்கூறுகளை அழித்து ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள பாலிபினால் என்ற அமினோ அமிலம் பாப்கார்னில் அதிகம். இவை ரத்த நாளங்களை வலுவாக்கி சீரான ரத்த ஓட்டத்துக்கு வகை செய்கிறது. பாப்கார்னை அன்றாடம் எடுத்து கொள்ளலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடுகு,சீரகம்,ஏலக்காய்

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.

ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.

புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.

மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.

சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இயற்கை உணவும் ஆரோக்கியமும்

நாம் அன்றாடம் உண்ணும் அளவில் உள்ள எண்ணற்ற சத்துக்களைப் பற்றிய ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றைப் பார்ப்போமா!பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை.

‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலேயே வாழ்கின்றன. இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துக்கள் கூறுவதை

‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனில்’

என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது. இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பாக மருத்துவப் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான்.

அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர்.

ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம் என்பதில்தான் - நாம் நம் நாட்டிற்கும்

கலாச்சாரத்திற்கும் என்பதினால்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கம் ஒவ்வாத பிற நாட்டு உணவு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பததோடு, உடலை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்களான புகைத்தல் மது மற்றும் கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருட்களை பாவித்து நமது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதனால் நரை, திரை, மூப்பு சாக்காடுகள் ஆகியவை குறைந்த வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றோம்.

உணவு உடலைப் புஷ்டியாக்குவதை விட அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நமது உணவிற்கு ஏற்றபடித் தான் உடலும், நமது புத்தி, சக்திகளும் அமையும்.

நாம அனைவரும் பெரும்பாலான உணவு வகைகளை சமைத்தே சாப்பிடுகிறோம். எனினும் பலவித காய்கனி வகைகளை அப்படியே சுத்தம் செய்து பச்சையாகவே சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாம் சமையல் செய்யும்போது பலவித ஊட்டச்சத்துகள் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது, எதனால் அழிகிறது என்பதை பார்க்கலாமா?

முதலாவதாக அரிசியை எடுத்துக் கொள்வோம். முன்காலம் போல் கைக்குத்தல் அரிசி கிடையாது. நாம் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக தீட்டி அரைத்து விடுவதால் அரிசியில் இருக்கும் தயாமின் பீ வைட்டமின் வீணாக்கப்படுகிறது. இந்த வைட்டமின் தானியத்தின் அடிப்பகுதியில்தான் இருக்கும். இவ்வாறு தீட்டப்பட்ட அரிசியை உண்ணும்போது நமக்கு மாவுச் சத்துதான் கிடைக்கும். உயிர்ச்சத்தும் வைட்டமின்களும் காய்கறி பழங்களிலிருந்து கிடைக்கின்றது. இந்த சத்து நீரினாலும் வெப்பத்தாலும் சுலபமாக அழியக்கூடியவை. சத்துகள் அழியாமலிருக்க சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உணவுப் பொருட்களை சமையல் செய்யும் பொழுது, பாதுகாத்து வைக்கும்பொழுது, காற்றில் வைக்கும்பொழுது, சூடாக்கும்பொழுது, கழுவும் பொழுது என பல சமயங்களில் அதன் சத்துகள் வீணாக்கப்படுகிறது. சமைக்கும் விதமும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்து முறை கழுவுகின்ற தண்ணீரைச் சமையலில் வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேக வைத்துக் கஞ்சியை வடித்துவிடும்போது இருக்கும் சத்தும் போய் விடுகின்றது. அதனால் குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்தும் குறையும். நீரில் கரையும் வைட்டமின்கள் சமைக்கும்போது அதிக அளவில் அழிக்கபடுகின்றன. பொதுவாகவே எந்தவித காய்கறிகளாக இருந்தாலும் கழுவிய பிறகு தான் நறுக்க வேண்டும். அதிலும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கும்போது காயின் அத்தனை பரப்புகளும் காற்றில் பட்டு அதில் உள்ள சத்துகளை இழக்கின்றன.

காய்கறிகளை எப்போதுமே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தான் போட வேண்டும். உருளைக் கிழங்கு போன்றவற்றை தோலுரிக்காமல் வேக வைத்ததிற்குப் பின் தான் தோல் நீக்க வேண்டும். இலைக் காய்கறிகளில் நிறையை கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன என்பதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்த பலன்களைத் தரும். காய்கனி வகைகளை பொதுவாகவே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சத்துகள் பாதுகாக்கப் படுகின்றன. முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் அதில் இருக்கும் அவிட்டின் என்ற புரதம் பயோடின் என்கிற உயிர்ச்சத்தை இழக்கிறது. எனவே வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நல்ல நோக்குடன் நமது அன்றாட உணவு வகைகளை சரியான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ருசியும் மணமும் குணமும் நிறைந்ததாக சாப்பிடும்போது, கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் அழிந்துவிடுவதோடு, எளிதாக ஜீரணம் ஆகும் தன்மையுடன் நல்ல ஆரோக்கியம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

நம்மில் சிலர் செய்வதைப் போல் அதிக நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சாதாரணமாகவே எந்தவித காய்கறிகளாய் இருந்தாலும், முதலில் அவற்றை நல்ல நீரில் அலசி சுத்தப்படுத்தித் தான் சமையலுக்கு உபயோகிக்க வேண்டும். பிரசர் குக்கர் சமையல் நேரத்தை குறைப்பதோடு சமைக்கும் காய்கறிகள் அனைத்தின் சத்துகள் அழிவதை தடுக்கிறது. பழங்களை நறுக்கி வைத்தால் சில நிமிடங்களில் நிறம் மாறி விடுகின்றன. இதைத் தடுக்க சிறிதளவு சர்க்கரை போட்டால் போதும். சில அரிசியைத் தண்ணீரில் கழுவும்போது 40 சதவீதம் தயாமின் சத்து தண்ணீரில் கரைந்து போய் விடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்தமுறை கழுவுகின்ற தண்ணீரை சமையலில் வேறு பொருட்களுடன் உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேகவைத்துக் கஞ்சியை வடிப்பதால் இருக்கும் சத்தும் போய்விடுகிறது. பருப்புகளை வேக வைக்கும்போது சமையல் சோடாவை சேர்ப்பதால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்தும் போது அதிலுள்ள சுண்ணாம்பு சத்து பாத்திரங்களின் ஓரங்களில் படிந்துவிடுகிறது. அதனால் பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதத்தின் தரமும் குறைகிறது. காய்கறிகளை கழுவிய பிறகுதான் பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். சிறிதாக நறுக்கப்பட்டு நீரில் கழுவும்போது அதன் சக்திகள் கரைந்துவிடும். இலைக்காய்கறிகள் நிறைய காரோட்டின் கொண்டவையாக இருக்கின்றன. அது வைட்டமின் ஏ ஆக உடலில் மாறுகிறது. ஆதலால் காய்கறிகளை வறுப்பதை காட்டிலும் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.

சில காய்கறிகளில் புளி சேர்க்கப்படும் போது, அதன் அமிலத் தன்மை வைட்டமின் அழிவை தடுக்கிறது. முட்டையை வேக வைக்காமல் சாப்பிடுதல் கூடாது. தானியங்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லா தானியங்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மிகுந்தும் குறைந்தும் உள்ளவையாகும். முக்கியமாக பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அன்றாடம் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதையும் பழக்கமாகக் கொள்ள வேண்டும். முக்கியமாக சிறார்களுக்கு பிடித்த மாதிரி விதவிதமான உணவு வகைகளை, முக்கியமாக கீரை, பருப்பு கலந்த சாதம், பழம் ஜூஸ், பால் போன்றவற்றை அவர்களின் பசிக்கேற்ப உட்கொள்ள வைத்து, விளையாட வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயல வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, ஜலதோசம், ஜுரம் போன்றவற்றிற்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து மற்றும் உணவு வகைகளை தர வேண்டும்.

இப்படியாக நமது உணவு வகைகள் என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து, இராசயனச் சத்து மற்றும் அமிலச்சத்து போன்றவற்றை இயற்கையே அமையப் பெற்ற அனைத்து காய், கனிகள், தானியங்கள் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக் சுவைபட சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தவறான பழக்கவழக்கங்களான போதை மருந்து உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவற்றை மேற்கொண்டால் அதன் விளைவு என்ன என்பதைப் பற்றி கூறத் தேவையில்லை.

அதுபோன்றே பாலியல் சம்பந்தமான ஒழுக்கங்களும் நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும். எனவே இவற்றையெல்லாமம் எளிதில் பெற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணருகின்ற பக்குவத்தோடு, நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் என இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த உடல் அழிவதற்கு காரணமாய் விளங்குவது ஐந்தில் நான்கு பங்கு ஆகாரமே என்றும், ஒரு பங்கு அளவுக்கு மீறிய தூக்கமும் பயமும் போன்ற தீய உணர்வுகளும் என்கிறார் வள்ளலார்.

இவ்வுண்மையை காட்டும் வகையில், ஒருவன் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பாகம் அவனது உடம்பிலும், மற்ற இரண்டு பாகங்களினால் வியாதி ஏற்பட்டு மருத்துவ செலவிற்குத்தான் உட்படுத்துகின்றன. ‘இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்’ என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப ஒரு மனிதன் பட்டினியால் இறப்பதற்கு முன்பாக நூறு பேர் விருப்பம் போல் உண்டு இறந்துவிடுகிறார்கள். கொழுத்த உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொல்கிறது என்றார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர். ஒரு வியாதிக்கு எது மூல காரணமாயினும் முறை கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையாகும்.

உடல் ஆரோக்கியமாக வளர, உணவில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஒருவன் மூன்று வேளைக்குமேல் சாப்பிடக்கூடாது. “ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி (இல்லறத்தில் உள்ளவன்); மூன்று வேளை உண்பவன் நோயாளி; நான்கு வேளை உண்பவனின் உயிர் உடலை விட்டு விரைவில் போய்விடும்” என சித்தர் பாடல் கூறுகிறது. ஆனால் இக்காலத்தில் பெரும்பான்மையோர் நான்கு முறை என்ன, ஆறுமுறைகள் கூட உண்கிறார்கள். காலை பெட் காபியோ தேனீரோ, பின காலை டிபன், மதிய சாப்பாட்டிற்கு முன்பு ஏதாவது நொறுக்குத் தீனி, மாலை சிற்றுண்டி, இரவு உணவிற்கு முன்பு மது அருந்துதல், இரவு டின்னர் என இப்படி பல தடவை உண்பவர்களை நாம் இங்கு காணாததா? வசதி படைத்தவர்கள் சத்து மிகுதியான கனி வகைகளான ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பழரசங்கள், விலை உயர்ந்த பலவிதமான உணவு வகைகள், டானிக்குகள் முதலியவற்றை அருந்தியும் கூட சாதாரண ஏழை மக்களை விட இருதய நோய், இரத்த அழுத்தம், சுகர் கம்பெளையின்ட், கொலஸ்டரால், கொழுபுச் சத்து கூடுதல், புற்று நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னை, கூடுதல் எடை என்று எண்ணற்ற வியாதிகளால் அவதிப்படுவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. இது தவிர போதை வஸ்துக்கள் பாவித்தல், முக்கியமாக புகைப்பிடித்தல் போன்றவையும் காரணமாகும். சத்துகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போது ஏன் அகால மரணம் அடைகிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கின்றன நம் முன்னோர்கள் வகுத்த எளியமுறை உணவுப் பழக்க வழக்கங்கள்.

அதாவது ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்கு காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இந்தக் காலத்திற்கு இடையிடையே ஏதாவது பழமோ, சிற்றுண்டியோ அருந்தினால் ஜீரணம் ஆவதற்கு 8 மணி நேரம் 9 மணி நேரம் கூட ஆகிறது என்று வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலிருந்து அறிந்து இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதைத்தான் திருவள்ளுவரும் தனது திருக்குறளில்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

என்று காட்டியுள்ளார் போலும்.

பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப் பொருள் செரிமானமாவதற்கு உமிழ் நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும். சாப்பிடும்போது அவரச அவசரமாக உட்கொள்ளாது, நிதானமும், மனதில் எந்த வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காது மகிழ்ச்சியுடன் உணவு அருந்துதல் வேண்டும். இரவு சாப்பாடு என்பதில் மிகவும்.

அக்கறையும் கவனமும் தேவை. மதிய உணவை விட ஒரு பிடி குறைத்தே சாப்பிடுதல் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவு, சப்பாத்தி போன்றவையும், ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால் போன்றவற்றை அருந்தி விட்டு சுமார் 15 நிமிடங்களாவது உலாவுதல் வேண்டும். அவ்வாறு நடப்பதால் அருந்திய உணவு நன்றாய் ஜீரணம் ஆவதோடு, இரவு நித்திரையும் நன்றாக அமையும்
காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி

புகை பிடிப்பவரா....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்பூரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.
உடல் பருமனைக் குறைக்க எளிய உணவு

பெரும்பாலானவர்களை அதிகம் பாதிப்பது உடல் பருமன் அதிரிப்பது தான். உடல் உழைப்பு குறைவினாலும், உணவுப் பழக்கத்தினாலும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது.

இதனால் கவலையடைபவர்கள் ஏராளம். உடல் பருமனை குறைக்க எளிய உணவு முறையை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்துவந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கலாம்.

உடல் பருமனானவர்கள் பப்பாளிக்காயைச் சமைத்து சாப்பிடுவதினால் உடல் மெலியும். சுரைக்காயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் பருமன் குறையும்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகிவந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் அழகு பெறும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.