ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

பருக்கள் இல்லாத சருமத்திற்கான சில எளிய சிகிச்சைகள்!!!

பருக்கள் இல்லாத பளபளக்கும் சருமத்தை பெறுவதற்கு எளிய சிகிச்சை முறைகளை ஆவலுடன் தேடி கொண்டிருக்கும் பல பேரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் இனி எங்கும் தேட தேவையில்லை. இந்த கட்டுரையை கடைசி வரை படித்தாலே போதுமானது. உங்களுக்கு வேண்டியது உங்களுக்கு கிடைக்கும்.
முகத்தில், குறிப்பாக கோடை காலத்தில், வரும் பருக்களை பெண்கள் முன் கூட்டியே கணித்திருப்பார்கள். பொதுவாக அதற்கு சிகிச்சை எடுத்திட அவர்கள் மருத்துவரை அணுகுவார்கள். சிகிச்சைக்காகவும் மருந்து மாத்திரைக்காகவும் பணத்தை தண்ணி மாதிரி செலவும் செய்வார்கள். பருக்கள் இல்லாத சருமத்தை பெற சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த செலவுகள் அனைத்தையும் தடுக்கலாம். பரு பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காண சில பயனுள்ள வழிமுறைகள், இதோ:
பருக்கள் இல்லாத சருமத்திற்கான சில எளிய சிகிச்சைகள்!!!
அடிக்கடி முகத்தை கழுவுங்கள்
கோடைக்காலத்தில், உங்கள் எண்ணெய் சுரப்பி அதிகமாக வேலை செய்வதால், உங்கள் முகம் அடிக்கடி எண்ணெய் பசையுடன் மாறி விடும். முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம், நுரையை உண்டாக்கும் நல்லதொரு க்ளென்சர் மூலமாக உங்கள் முகத்தை தினமும் இருமுறை கழுவ வேண்டும். தினமும் ஒரு முறை கழுவினாலும் கூட போதுமானதே. அதனால் அதனை முயற்சி செய்து பார்த்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை கழுவ வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்.
மேக்-அப்பை நீக்கிடுங்கள்
நல்ல தோற்றத்தை பெறுவதற்கு, பெண்கள் மேக்-அப் போட பெரிதும் விரும்புகின்றனர். இத்தனை சரிவர கையாளவில்லை என்றால், பருக்கள் உண்டாகும். படுக்க செல்வதற்கு முன், எப்போதும் மேக்-அப்பை கலைத்து விட்டே செல்லுங்கள். அப்படி செய்யாவிட்டால், பருக்களை நீங்களே உங்கள் முகத்தில் குடியேற வரவேற்கின்றனர்.
தயவு செய்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்
ஆம், தயவு செய்து சொல்வதை கேளுங்கள். முகத்தில் வரும் பருக்களை நீக்க வேண்டும் என்றால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முதலில் கை விடுங்கள். இந்த பழக்கத்தால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பருக்களும் தீவிரமடையும்.
மேற்கூறிய அனைத்தும் எளிய வழிமுறைகளாக இருந்தாலும் கூட, பருக்கள் இல்லா சருமத்தை பெறுவதற்கு சிறந்த டிப்ஸாக விளங்குகிறது. அதனால் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக உங்களால் நடமாட முடியும். இந்த டிப்ஸ்கள் எல்லாம் சிறப்பாக செயல்படுவதில்லை என்று பல பெண்கள் இதனை தவிர்த்து வருகிறார்கள். அப்படியானால் அது அவர்களின் தவறான புரிதலாகும். அதனால், கோடைக்காலத்தின் போது, இந்த டிப்ஸ்களை பின்பற்றி, பருக்கள் இல்லாத முகத்தினை பெற்றிடுங்கள்.

நாக்கில் படியும் மஞ்சள் நிற அழுக்கைப் போக்க சில டிப்ஸ்...


நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாக ஒரு படலம் சூழ்ந்திருக்கும். இது ஆரோக்கியமற்ற வாய் பராமரிப்பைக் குறிக்கும். இத்தகைய வெள்ளைப்படலத்தால் எந்த ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்கப் போவதில்லை என்றாலும், இந்த வெள்ளைப்படலம் கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக நாக்கில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் போன்றவை தங்கியிருப்பதால் தான், நாக்கின் மேலே வெள்ளையான படலம் காணப்படுகிறது. மேலும் இந்த வெள்ளைப்படலமானது மருந்து மாத்திரைகள் எடுக்கும் போது, மது அருந்தும் போது, புகைப்பிடிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது அதிக அளவில் ஏற்படும்.
ஆகவே நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தைப் போக்கவும், வாயில் இருந்து துர்நாற்றம் வருவதை தவிர்க்கவும் வேண்டுமானால், பற்களை தினந்தோறும் இரண்டு முறை துலக்குவதுடன், நாக்குகளையும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

நாக்கில் உள்ள அழுக்கைப் போக்க சில டிப்ஸ்..போதிய தண்ணீர்

தினமும் உடலுக்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நாக்கில் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் தங்கிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீரை குறைவாக குடித்தால், உணவுத்துகள்கள் நாக்கில் உள்ள வெடிப்புக்களில் தங்கிவிடும். ஆகவே நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீரை அதிக அளவில் குடித்து வரை வேண்டும்.
கொப்பளிக்கவும்

தினமும் மூன்று முறை வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் நாக்கில் நச்சுக்கள் தங்குவதைத் தவிர்க்கலாம். அதிலும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இந்த மாதிரி தினமும் காலை மற்றும் இரவில் படுக்கும் முன் செய்து வருவது மிகவும் நல்லது.

சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்

சர்க்கரை கலந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் மிகவும் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால், அவை நாக்கில் வெள்ளைப்படலத்தின் அளவை அதிகரித்துவிடும். எனவே நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், சர்க்கரை உள்ள பொருட்கள் அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.


நாக்கை சுத்தப்படுத்தவும்

தினமும் பற்களை துலக்கும் போது, நாக்கை சுத்தம் செய்யும் பொருள் கொண்டோ அல்லது டூத்பிரஷ் கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் பற்களை துலக்கிய பின், சிறிது உப்பை நாக்கில் தூவி மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால், நாக்கில் தங்கியுள்ள பாக்டீரியாக்களை நீக்கிவிடலாம். முக்கியமாக நாக்கை தேய்க்கும் போது, கடுமையான முறையில் தேய்க்க வேண்டாம். இல்லாவிட்டால், நாக்கில் கொப்புளங்கள் வருவதோடு, இரத்தக்கசிவையும் ஏற்படுத்திவிடும். எனவே மென்மையாக கையாள வேண்டும்.


மஞ்சள்

நாக்கை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நாக்கில் வெள்ளைப்படலம் வருவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, தினமும் நாக்கில் தேனை தடவி வருவதும் நல்லது.

தேங்காய் எண்ணெய்

நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தை நீக்கிய பின், தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டால், நாக்கில் உள்ள புண்களை விரைவில் குணமாக்கலாம்.

தயிர்

நாக்கில் வெள்ளைப்படலத்தை தடுக்க வேண்டுமானால், கான்டிடா என்னும் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்க வேண்டும். இத்தகைய பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கும் குணம் தயிருக்கு உள்ளதால், தினமும் இரவில் படுக்கும் முன், நாக்கை சுத்தம் செய்த பின் தயிரை நாக்கில் தடவிக் கொண்டால், நாக்கில் பாக்டீரியாவின் தாக்கம் இல்லாதவாறு பாதுகாக்கலாம்.


வியாழன், 24 மே, 2012

மாட்டிறைச்சி சாப்பிடுவதால் இளவயது மரணம் ஏற்படும் ஆபத்து...!

"Red meat" எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது.

மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. "Myoglobin" என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட "Myoglobin" அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ”ஹாட் டாக்”(சாஸேஜ்) எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம். அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!
வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.
தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்..!

நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.

கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது
இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள்.

"அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து சாப்பிடுங்க" என்று இன்னொரு பக்கம் ஆலோசனை வேறு சொல்வார்கள். இதனால், எதை சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? என்ற குழப்பம் நிறைய பேருக்கு வரத்தானே செய்யும்?. இதற்கான ஆலோசனைகளை கூறுகின்றனர் உணவியல் நிபுணர்கள் படியுங்களேன்.

முதலில் நமக்கு கேஸ் ப்ராப்ளம் வருவதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாத சாப்பாட்டு விஷயங்களால் தான். மேலும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களால் கூட உடலில் கேஸை அதிகமாக சேர்க்கக் கூடிய நிலை வந்து விடுகிறது.

அரைத்து சாப்பிடுங்கள்

வேக வேகமாக உணவை உண்பதால், வாய்வழியாக காற்றானது வயிற்றுக்கு செல்கிறது. உணவை அதிகமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக சுவைத்து சாப்பிட்டால் கேஸ் ப்ராப்ளம் ஏற்படாது.

மேலும் சிக்லெட், சூயிங்கம் போட்டு நீண்ட நேரம் மெல்லுவதாலும், வயதானவர்கள் வெறும் வாயை மெல்லுவதாலும் கேஸானது வயிற்றுக்குள் போக அதிக வாய்ப்பு உள்ளது.

இனிப்பு உணவுகள்

இனிப்புப் பொருட்களில் 'சார்பிடால்' என்ற பொருள் இனிப்புக்காக சேர்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பாக்கெட்டில் அடைக்கப்படும் இனிப்புகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் அதிக கேஸ் உண்டாகும்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்து நிரம்பிய பொருட்கள் பெரும்பாலும் அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களாகும். அதிலும் ப்ரக்டோஸ், லேக்டோஸ், ரேபினோஸ், சார்பிடால் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இவை அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடியவை. எனவே இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.

சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அதிகமாக கேஸ் உருவாவதைத் தடுக்கலாம். அதற்காக பட்டினி கிடக்க முடியுமா! ஆகவே கேஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களான வெண்ணெய், தயிர், சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ், வெள்ளை சாதம், முட்டை, மீன், கேரட், வெஜிடேபிள் சூப் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

ஆகவே அளவோடு சாப்பிடுங்கள், உங்களை கேஸ் தொந்தரவு செய்யாது என்கின்றனர் நிபுணர்கள்.